MARC காட்சி

Back
ஓமாம்புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில்
245 : _ _ |a ஓமாம்புலியூர் வியாக்ரபுரீசுவரர் கோயில் -
246 : _ _ |a பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் கோயில், உமாப்புலியூர், திருவோமாம் புலியூர்
520 : _ _ |a பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுன்ற இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31-ஆவது தலமாகும். ஞானசம்பந்தர் பதிகத்தில் இத்தலம் "ஓமமாம்புலியூர்" என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் "ஓமாம்புலியூர்" என்று மருவி வருகிறது. இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையவர். இத்தலத்திலுள்ள இறைவன் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி என்றழைக்கப்படுகிறார். இத்தலத் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் கௌரி தீர்த்தமாகும். இத்தலத்தின் மரம் வதரி (இலந்தை) ஆகும்.
653 : _ _ |a கோயில், தமிழ்நாட்டு சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், சிவன் கோயில், காட்டுமன்னார்குடி, கடலூர், ஓமாம்புலியூர், பிரணவபுரீசுவரர், துயர்தீர்த்தநாதர் கோயில், சைவம், பதஞ்சலி, பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
700 : _ _ |a திரு.வேலுதரன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 04144-264845
905 : _ _ |a கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர், அப்பர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும்.
914 : _ _ |a 11.214817
915 : _ _ |a 79.558633
918 : _ _ |a பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
922 : _ _ |a வதரி (இலந்தை)
923 : _ _ |a கொள்ளிடம், கௌரி தீர்த்தம்
925 : _ _ |a மூன்று கால பூசை
926 : _ _ |a மகா சிவராத்திரி, மாசி மகம், மார்கழி திருவாதிரை.
927 : _ _ |a சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும், பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் 'வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் ' என்றும்; இறைவன் பெயர் 'வடதளி உடையார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் இலிங்க வடிவில் இறைவன் காட்சி தருகின்றார். மூலவர் கருவறையின் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சக்கராயுதமூர்த்தி சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளன. மூலவர் கருவறை விமானத்தின் தேவகோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்குப்புறம் இலிங்கோத்பவர், வடபுறத்தில் நான்முகன் ஆகிய சிற்பங்களும், அர்த்தமண்டபக் கோட்டத்தில் ஆடல்வல்லான், விநாயகர், துர்க்கை ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் ஞானகுருவாக தென்முகக்கடவுள் சிற்பம் உள்ளது.
930 : _ _ |a உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி உமையம்மை பூமிக்கு வந்தார். அவர் இத்தலத்தில் தங்கியிருந்து சிவனை வணங்கி வந்தாள். இறைவன் உமையின் தவத்திற்கு மகிழ்ந்து அவளுக்கு காட்சி கொடுத்து தெட்சிணாமூர்த்தியாக உமாதேவியார் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது. ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச்சிறப்புடைய ஊர் என்பதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.
932 : _ _ |a கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரி தீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம்.. அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. மகாமண்டபத் திருச்சுற்றில் ஆறுமுகப் பெருமான் தனி கருவறை உள்ளது. வலம் முடித்து உட்சென்றால் நேரே மூலவர் கருவறை காணப்படுகின்றது. தெற்கு நோக்கி அம்மன் கருவறை தனித்து காணப்படுகிறது. மகாமண்டபத்தில் ஞானகுரு தட்சிணாமூர்த்தி தனி கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில், கீழக்கடம்பூர் ருத்திராபதீசுவரர் கோயில், காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோயில்
935 : _ _ |a சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ.தொலைவு. சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து எண் 41 இத்தலம் வழியாகச் செல்கிறது. கோவில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம்.
936 : _ _ |a காலை 07.00 முதல் 11.30 வரை மாலை 05.30 முதல் 07.30 வரை
937 : _ _ |a ஓமாம்புலியூர்
938 : _ _ |a காட்டுமன்னார்குடி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a காட்டுமன்னார்குடி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000332
barcode : TVA_TEM_000332
book category : சைவம்
cover :
Primary File :

TVA_TEM_000332/TVA_TEM_000332_ஓமாம்புலியூர்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000332/TVA_TEM_000332_ஓமாம்புலியூர்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000332/TVA_TEM_000332_ஓமாம்புலியூர்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000332/TVA_TEM_000332_ஓமாம்புலியூர்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000332/TVA_TEM_000332_ஓமாம்புலியூர்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000332/TVA_TEM_000332_ஓமாம்புலியூர்_வியாக்ரபுரீசுவரர்-கோயில்-0006.jpg